மின் கட்டண உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
மின் கட்டண உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
முசிறி கைகாட்டியில் மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கட்டண உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி தலைமை வகித்தார். ஒன்றிய குழு தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், சி ஐ டி யு நிர்வாகி கிருஷ்ணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் அசோக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர் அனைவரும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாய தொழிலாளர் சங்கம் கமலம், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் விஜயலட்சுமி, சிபிஎம் நிர்வாகிகள் கண்ணன் , முருகேசன், ராமசாமி மற்றும் சி ஐ டி யு நிர்வாகிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய குழு பாபு நன்றி. கூறினார்.

தொடர்புடைய செய்தி