பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 9பவுன் நகைகள் திருட்டு

73பார்த்தது
தா. பேட்டை அருகே பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு

துறையூர் தாலுகா, பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அங்குராஜா (46). இவரது குடும்பத்தினர் சேலம் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் சென்று விட்ட நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பட்டபகலில் அடையாளம் தெரியாத மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்து 9 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து அங்குராஜா ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி