முசிறி அருகே உள்ள பொன்னாங்கண்ணிபட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 55). குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனிமையின் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் சம்பவம் நடந்த நேற்று (நவம்பர் 28) வீட்டின் அருகே உள்ள மரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து முசிறி காவல் நிலைய போலீசார் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.