தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக திமுக அரசு மாற்றியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இபிஎஸ், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி, மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.