சாலை விபத்தில் சிக்கிய பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் கொள்ளுப் பேரன் மங்கள் முண்டா உயிரிழந்தார். ஜார்க்கண்டின் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருதய செயலிழப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த புதன்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்திருந்தார். ஜார்க்கண்டில் 1875இல் பிறந்த பிர்சா முண்டா, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடி வரலாற்றில் இடம்பிடித்தவர் ஆவார்.