“பேருந்து படிக்கட்டில் நிக்காதீங்கப்பா” - கதறி அழுத தந்தை

76பார்த்தது
கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர், நேற்று முன்தினம் தனியார் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணித்துள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் மாணவர் உயிரிழந்தார். இந்நிலையில், அம்மாணவர் படித்த பள்ளியில் கடலூர் போலீஸ் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், உயிரிழந்த மாணவனின் தந்தை கலந்துகொண்டார். அப்போது, “யாரும் படிக்கட்டில் நிக்காதீங்கப்பா.. என் புள்ள போயிட்டான்” என மாணவர்கள் முன் காலில் விழுந்து கதறி அழுதார்.

நன்றி: abpnadu

தொடர்புடைய செய்தி