திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சியில்அமைந்துள்ள ஆலம்பாளையம்புதூர் (மேற்கு) ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ ராசாயி அம்மன், மற்றும் குதிரை வாகன தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில்கள் புதுப்பிக்கப்படல்
கும்பாபிஷேக விழாவில் பல்வேறு யாகசாலை பூஜைகள் மேலும் நான்கு கால யாகசாலை பூஜைகள் உட்பட பல்வேறு பூஜைகள் சநடைபெற்றது இந்த யாகசாலை பூஜைகளை காட்டுப்புத்தூர் சிவஸ்ரீ செல்வசுப்பிரமணியம் சிவாச்சாரியார் மற்றும் வாகிஷ்சிவம் குழுவினர்கள் நடத்தினர். நான்கு கால யாகசாலை பூஜையில் முடிவுற்று யாகசாலையில் இருந்து கடம்புறப்பட்டு காலை 9. 30 மணியளவில் ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ ராசாத்தி அம்மன், குதிரை வாகனத்திற்கும் கோபுர கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியார் ஊற்றினார்கள் அப்பொழுது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர் இந்த கும்பாபிஷே விழாவில் தவிட்டுப்பாளையம் காந்தி சிலை, காட்டுப்புத்தூர், சின்ன பள்ளிபாளையம், உள்பட ஆலம்பாளையம் புத்துரை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் 2000- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்ட க_