தமிழகமெங்கும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. முசிறி வட்டம் புலிவலம் பகுதியில் எட்டு மில்லி மீட்டர் மற்றும் முசிறி பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தாபேட்டை பகுதியில் நேற்று மழை இல்லை. இதனை பெருக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது