தாபேட்டை சிவன் கோவிலில் மழை வேண்டி 108 சங்கு பூஜை

56பார்த்தது
தாபேட்டை சிவன் கோவிலில் மழை வேண்டி 108 சங்கு பூஜை
தா. பேட்டை சிவாலயத்தில் மழை வேண்டி 108 சங்கு பூஜை.


திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தா. பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கோயில் பிரகாரத்தில் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி கலசம் வைத்து யாக வேள்வி நடைபெற்றது.
யாக வேள்வியை தொடர்ந்து காசி விஸ்வநாதர் காசி விசாலாட்சி ராஜகணபதி ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வானை மற்றும் பிரகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தா. பேட்டை முசிறி, நாமக்கல், திருச்செங்கோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி