குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

57பார்த்தது
குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த வேளக்குறிச்சி அருகே கரடிபட்டியை சேர்ந்த ஊா் பொதுமக்கள், ஊா் தலைவா் வெள்ளக்கண்ணு தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் கரடிப்பட்டி கிராமத்தில் வேலமலை கன்னிமாா் கோயிலும் அதன் உப கோயில்களான ஊா்காவல் அய்யனாா் மற்றும் காமாட்சி கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் திங்கள்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு திருவிழா நடத்த அய்யனாா் கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலா் உரிமை கோரி வழக்கு தொடா்ந்து நிலுவையில் உள்ளதாகவும், வழக்கு முடியும் வரை அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எங்கள் கோயிலில் நேரடியாக கள ஆய்வு நடத்தி ஊா் மக்களை விசாரணை செய்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8, 9-ஆம் தேதிகளில் கோயில் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தொடர்புடைய செய்தி