திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கோவில்பட்டி சாலை முக்கிய சாலையாகும். இந்த சாலையில் நகராட்சி ஆரம்ப பள்ளி எதிராக வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் இன்று மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ம. அப்துல் சமது எம்எல்ஏவின் முயற்சியால் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்றது.