விதை பந்துகளை விதைக்கும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்

69பார்த்தது
விதை பந்துகளை விதைக்கும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்
மணப்பாறை, விராலிமலை சாலையில் உள்ள சௌமா பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் கடந்த சில மாதங்களாக வேம்பு, அரசு, புங்கை, புளி, பலா, நாவல், மா உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகளை சேகரித்து அதை விதை பந்துகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவ்வபோது பெய்யும் மழையின் காரணமாகவும் மழை காலம் தொடங்க உள்ள நிலையிலும் தற்போது விதை பந்துகளை தூவினால் அவை மழையினால் துளிர்விட்டு வளரத்துவங்கும் என்பதால் தங்கள் தயார் செய்த விதை பந்துகளை தூவ முடிவு செய்தனர். அதன்படி மாணவ, மாணவிகள் தாங்களே வீட்டில் தயார் செய்த விதை பந்துகளை எடுத்து வந்து பள்ளி முதல்வர் எக்ஸிபா கிரேஸிடம் ஒப்படைத்தனர். அப்போது விதை பந்துகளால் பள்ளியில் பெயரை எழுதி காட்சிப்படுத்தினர். அதிக விதை பந்துகளை தயார் செய்திருந்த மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகி செளமா ராஜரெத்தினம் மரக்கன்றுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினர். ‌ மாணவர்களால் தயார் செய்து எடுத்து வரப்பட்ட 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதை பந்துக்களை நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் எடுத்து கொண்டு மணப்பாறையை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆசிரியர்களுடன் சென்று அப்பகுதியில் உள்ள பொது இடங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விதைத்தனர்.

தொடர்புடைய செய்தி