மணப்பாறை கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா

71பார்த்தது
மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி மாமுண்டி நல்லாண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி முதல்கால யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்காக கோயிலில் இருந்து
சிவாச்சாரியார்களால் கடங்கள் யாக சாலைக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சனிக்கிழமை இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால பூஜைகள் நடைபெற்றது. பிறகு கோபுர விமானம் மற்றும் மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம்,
தீபாராதனை நடைபெற்றது. இந்த ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந. அன்பழகன் மற்றும் அறங்காவலர் கே. ஆர். கே. முத்து வீர
லெக்கைய நாயக்கர் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி