திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய ஆலோசனை

1531பார்த்தது
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய ஆலோசனை
திருச்சி மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் பரவலாக நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் நல்ல விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். நிலக்கடலையில் அதிக இடுபொருள் செலவாக இருப்பது விதையே ஈரப்பதம், புறத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் பிறரகங்களின் கலப்பு விகிதம் ஆகியவற்றால் விதையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதைகளின் தரப்படி நிலக்கடலையின் முளைப்புத்திறன் 70 %. ஈரப்பதம் 9%, புறத்தூய்மை 96% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் பூச்சி மற்றும் பூஞ்சாண தாக்குதலுக்கு வழிவகுக்கும், மேலும் முளைப்புத்திறனும் பாதிக்கப்படும். ஆகவே நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் நிலக்கடலையின் தரத்தை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும். என திருச்சி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன், வேளாண்மை அலுவலர்கள் அனிதா, ரமாபிரபாநளினி ஆகியோர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி