துவரங்குறிச்சியில் சட்ட விரோதமாக மணல் அள்ளியவர் கைது

57பார்த்தது
துவரங்குறிச்சியில் சட்ட விரோதமாக மணல் அள்ளியவர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பாறைப்பட்டி புளியரக்குளம் அருகே உள்ள பஞ்சாயத்து புறம்போக்கு இடத்தில் மண் அள்ளுவதாக ரகசிய தகவல் துவரங்குறிச்சி போலீசாருக்கு கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது JCB இயந்திரம் மூலம் எந்தவித அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மண் அள்ளி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்த சிவகங்கை அடுத்த சிங்கம்புணரியை சேர்ந்த சிவானந்தம் (30) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி