மணப்பாறையில் மங்கள இசையுடன் துவங்கிய கணபதி ஹோமம்

62பார்த்தது
மணப்பாறையில் மங்கள இசையுடன் துவங்கிய கணபதி ஹோமம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொன்முச்சந்தி அருகே உள்ள பூர்த்திகோவில் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்தாள ஈஸ்வரி உடனுறை திருமுக்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் சுயம்புவாக எழுந்தருளிய திருமுக்தீஸ்வரர் சிவலிங்கமாக காட்சி தருகிறார். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட விநாயகர், அந்தாளஈஸ்வரி, 5 அடி உயர பைரவர், வள்ளி, தெய்வானையு டன் பிரம்மாண்ட ஆறுமுகத்துடன் காட்சி தரும் முருகன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கட்சி தருகின்றனர். இக்கோயிலில் திருப்பணி குழு அமைத்து புனரமைக்கும் பணி நடந்தது. திருப்பணிகள் மற்றும் மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜூலை 12 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை மங்கள இசையுடன் கணபதி ஹோமம் துவங்கியது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கணபதி வேள்வி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று மாலை ஆறு காலமாக நடைபெற உள்ள யாகசாலை பூஜையின் தொடக்கமாக முதல் கால யாகபூஜை நடைபெறுகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி