திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் திண்டுக்கல்லில் இருந்து மாடு விற்பனை செய்ய வந்த மாட்டின் உரிமையாளர் ரமேஷ் மினிவேன் ஓட்டுநர் முருகன் என்பவர் விலையை மிக குறைவாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சந்தையை நடத்துபவர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் முருகன் என்பவர் திருவாரூர் அருகே திருகேந்தியில் இருந்து மாட்டை திருடிக்கொண்டு விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து திருடிய பசுமாட்டை விற்க முயன்ற மினி வேன் செல்வம் என்பவரை மாட்டின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் மாட்டுச்சந்தை நடத்துபவர்கள் பிடித்து மணப்பாறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த திருட்டுச் சம்பவத்தால் மணப்பாறை மாட்டுச்சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.