திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே கரடிப்பட்டியில் திருவிழா நடத்துவது தொடர்பாக எழுந்த பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக இன்று நான்கு வேன்களில் 500 பேர் புறப்பட தயாராகிறார்கள். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த டிஎஸ்பி மரியமுத்து தலைமையிலான போலீசார், வேனில் செல்ல இருந்தவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் ஊர் முக்கியஸ்தர்கள் 10 பேரை மட்டுமே ஆட்சியரகத்திற்கு செல்ல அனுமதித்தார்கள்