அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிய இருவர் கைது

85பார்த்தது
அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிய இருவர் கைது
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள கூடலூர் கொடிங்கால் வாய்க்கால் கரை பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மணல் திருடப்படுவதாக ஜீயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் மற்றும் மற்றொரு நபர் இருவரும் சேர்ந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளியபோது போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர். இதனைத் தொடர்ந்து பிரபாகரன் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மணல் கடத்த பயன்படுத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :