துறையூரில் கைவினை கலைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

1087பார்த்தது
துறையூரில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூர் விஸ்வகர்மா கைவினை அறக்கட்டளை இணைந்து துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருக்கும் கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை மர நுட்ப வேலை செய்யும் கலைஞர்களும் மர கழிவுகளில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டார்கள் பயிற்சியில் காந்தியின் ராட்டை, ஏர் கலப்பை மீன் உருவம் கொட்டாங்குச்சியில் இருசக்கர வாகனங்கள் தமிழர்கள் பண்பாட்டு உணர்த்தும் வகையில் உள்ள அனைத்து பொருள்களும் இடம்பெற்று இருந்தன அது மட்டும் இன்றி தற்கால குழந்தைகள் மறந்த மரப்பாச்சி பொம்மை மர தள்ளுவண்டி குதிரை பொம்மை மர சிற்பம் மீன் சின்னம் தாயகட்டை சிலைகள் ஆகியவற்றை சிறு சிறு மரத்துண்டுகளில் செய்தார்கள் சிறுசிறு மழைத்துளிகள் வீணாவதில் இருந்து உருவாக்கப்படும் நுட்பமான கைவினைப் பொருள்களும் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பது பற்றி கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you