திருச்சி: கணவன் அடித்ததால் மயங்கிய மனைவி உயிரிழப்பு

74பார்த்தது
திருச்சி: கணவன் அடித்ததால் மயங்கிய மனைவி உயிரிழப்பு
மணச்சநல்லூர் அருகே உள்ள பூனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சுமித்ரா. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த நேற்று முன்தினம் (நவம்பர் 27) காலை ஐயப்பன் சுமித்ரா இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி சுமித்ராவை அடித்து விட்டு வேலைக்குச் சென்று விட்டார். அப்போது சுமித்ரா மயங்கி கீழே விழுந்துள்ளார். 

சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது சுமித்ரா மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சுமித்ரா உயிர் இழந்தார். தகவல் அறிந்து மணச்சநல்லூர் போலீசார் சுமித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஐயப்பன் அடித்ததால் சுமித்ரா உயிரிழந்தாரா அல்லது மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி