லால்குடியில் டூவீலர் திருட்டு - மர்மநபர் கைவரிசை

79பார்த்தது
லால்குடியில் டூவீலர் திருட்டு - மர்மநபர் கைவரிசை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுதையூரை சேர்ந்தவர் பெருமாள். இவர் கைலாஷ் நகர் அருகே தனது டூவீலரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் டூவீலர் நிறுத்தப்பட்ட இடத்தில் வந்து பார்த்தபோது அவரது டூவீலர் இல்லாத கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து தனது டூவீலர் திருடு போனது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி