இருங்களூரில் கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது.

76பார்த்தது
இருங்களூரில் கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள சிவசக்தி நகரில் மளிகை கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.

இருங்களூரில் உள்ள சிவசக்தி நகரை சேர்ந்தவர் 28 வயதான தேவராஜ். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஹரிகரன், 19 வயதான ஆனந்தவேல் மற்றும் 17 வயதான சிறுவன் உட்பட மூன்று பேர் மளிகை கடைக்கு சென்று கடனாக சிகரெட் கேட்டுள்ளனர். அதற்கு மளிகை கடை உரிமையாளர் பழைய பாக்கியை கொடுத்தால் சிகரெட் தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிஹரன் அங்குள்ள பிஸ்கட் பாட்டில்களை எடுத்து கீழே போட்டு உடைத்துள்ளார். மேலும் கடை உரிமையாளருக்கு கத்தி முனையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன் மற்றும் ஆனந்தவேல் இருவரை கைது செய்தனர். பின்னர். அவர்களை திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி