கல்லூரி மாணவி இருவர் மாயம் போலிஸ் விசாரணை

548பார்த்தது
கல்லூரி மாணவி இருவர் மாயம் போலிஸ் விசாரணை
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர்- வள்ளி தம்பதியின் மகள் காவியா (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட் டப்படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், எங்கு சென் றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இதுபோல் அதேபகுதியில் ஜன்னதுல் (19) என்ற என்ஜினீயரிங் மாணவி யும் மாயமானார். இவர்கள் இருவரும் மாயமானது குறித்து அவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொன் மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி