திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் குருகிருஷ்ணன் (வயது 39) பட்டதாரி வாலிபர். இவரது மனைவி கீர்த்தனா (வயது 38) திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. குருகிருஷ்ணனுக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி தனது குழந்தையுடன் வெளியில் சென்றிருந்தார். மனைவி இல்லாத நேரத்தில் வீட்டில் குருகிருஷ்ணன் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீடு திரும்பிய மனைவி தூக்கில் தொங்கிய கணவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மனைவி கீர்த்தனா ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை இழந்து மனைவியும், தந்தையை இழந்த மகளும் தவித்து வருகின்றனர்.