“பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை” - மத்திய அமைச்சர் தகவல்

67பார்த்தது
“பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை” - மத்திய அமைச்சர் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “இந்துஸ்தான் மற்றும் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த ஒரு குறிப்பிட்ட தொகுதியான மெட்ரானிடசோல் 400 மி.கி., மற்றும் பாராசிட்டமால் 500 மி.கி., மாத்திரைகள் முறையே தரமானதாக இல்லை. இவை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக மருந்துகள் தொடர்பான புகார்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி