சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற காரை மறித்து, சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (45), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா (30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.