திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்தவர் ஐயப்பன்(வயது 41). இவர் சமயபுரம் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது டூவீலரை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றவர், மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவர் நிறுத்தப்பட்ட இடத்தில் அவரது டூவீலர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து தனது டூவீலர் திருடு போனது குறித்து அவர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.