பிலிப்பைன்ஸ்: தெற்கே மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் இன்று பிப்.06 மதியம் 2 மணியளவில் விபத்தில் சிக்கியது. இக்கோர விபத்தில் வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்கள் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.