தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் ரூ.1,354 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கியா மோட்டார்ஸ் இந்தியா சொகுசு கார்னிவல் மினிவேனின் அசெம்பிளிக்கான உதிரிப்பாகங்களின் இறக்குமதியில் தவறான தகவல்களை தெரிவித்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், கியா கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ், இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.