முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று (பிப்.,6) திருநெல்வேலி சென்றார். அங்கு அரசு திட்டப்பணிகளை களஆய்வு செய்த முதலமைச்சர், நெல்லை மாநகருக்கான திட்டங்களை வழங்கினார். தொடர்ந்து, தொண்டர்களைச் சந்தித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வீரத்துக்கும் வரலாற்றுப் பெருமைக்கும் புகழ்பெற்ற நெல்லை மாவட்டம், களம்2026-இல் கழகம் வென்று ஏழாவது முறை ஆட்சியமைக்கும் வரலாற்றைப் படைக்க, முழு வெற்றியை ஈட்டித் தர அறிவுறுத்தல்கள் வழங்கினேன்” என்றார்.