ஊட்டத்தூரில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

73பார்த்தது
ஊட்டத்தூரில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஊட்டத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியம் வயது 80. இவர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த நிலையில் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில்தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இது அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூதாதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் இருந்தா கானக்கிளிய நல்லூர் போலீசார் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி