மனைவியைப் பிரிந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

58பார்த்தது
மனைவியைப் பிரிந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ் வயது 42. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை பிரிந்து நான்காண்டுகளாக தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் தொடர்ந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துரைராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி