திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து என். எஸ். பி ரோடு வழியாக தெப்பக்குளம், நந்தி கோவில் தெரு, ஆண்டாள் வீதி ஆகிய பகுதிகளில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில், அதிமுகவினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.
இதில், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வார்டு கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.