புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை

79பார்த்தது
புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை நடைபெறுகிறது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை சார்பில் மகளிருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் 01. 07. 2024 முதல் 15. 07. 2024 வரை நடைபெற உள்ளது. நேரில் வந்து விண்ணப்பித்து சேர்க்கை மேற்கொள்ளலாம்
இந்நிலையத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
ஆடை தயாரித்தல், எம்ப்ராய்டரி ஆகிய தொழிற் பிரிவுகளிலும்,
10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள்
ஸ்டெனோகிராபி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் ப்ரோக்ராமிங் அசிஸ்டன்ட், டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர், மல்டிமீடியா அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், கம்மியர் மின்னணுவியல், இயந்திர வேலையாள் ஆகிய தொழிற் பிரிவுகளிலும்
பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஆர்வமுள்ள மகளிர் நேரில் வந்து தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து படித்து பயன் பெறலாம் என அரசு தொழிற்பயிற்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி