1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கார்கில் போர் வெற்றி தினத்தின் வெள்ளி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கார்கில் போரின் 25 ஆவது வெற்றி ஆண்டை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் மேஜர் சரவணன் உள்ளிட்ட கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் விஜயகுமார், நிர்வாக கமாண்டர் கர்னல் ஷ்யாம் சாரதி, தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் அருண்குமார், மாநகரக் காவல் போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திருமலைராஜன், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், வட்டாட்சியர் அருள் உள்ளிட்டோர் மலர்ப்ளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.