தாய் சேலையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

559பார்த்தது
தாய் சேலையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா தேவர் என்பவரின் மகன் மைக்கேல்ராஜ் (23), இவர் +12 படித்துவிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்தவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது தாய் சரோஜா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு அதன்பின் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீடு பூட்டி கிடந்துள்ளது. நீண்ட நேரமாக கதவை தட்டி திறக்காததால், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர்கள் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்தபோது, அவரது தாய் சரோஜா சேலையில், வீட்டின் பனை விட்டத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக மைக்கேல்ராஜை விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர், அங்கு பரிசோதித்த மருத்துவர் மைக்கேல்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து மைக்கேல் ராஜின் உடலை கைப்பற்றிய மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், மைக்கேல்ராஜ் ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி