நறுக்கிய வெங்காயத்தை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் வைத்திருந்தாலோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்திருந்தாலோ அதில் பலவகையான நுண்ணுயிரிகள் நுழைந்திருக்கும். இதை சாப்பிடும் பொழுது வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். நறுக்கிய வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைக்கும் பொழுது அதில் இருக்கும் நுண்ணுயிரிகள் மேலும் வளரத் துவங்கும். வெங்காயத்தில் உள்ள சல்ஃபரின் அளவு மோசமடையும். அதிக அளவு சல்ஃபர் குடல் நோய்கள் மற்றும் மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.