தூத்துக்குடியில் மீன்பிடி தடைக் காலம் துவக்கம்!

1898பார்த்தது
ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விசைப்படகுகள் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க தமிழக மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 இன்று இரவு முதல் அமலாவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைக்குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீன்பிடி கிராமத்தில் இருந்து ஆழ் கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற படகுகள் கரை திரும்பி அந்த படகுகளை மீனவர்கள் கரையில் நிறுத்தி உள்ளதுடன் பிடித்து வந்த ஏற்றுமதி ரகம் வாய்ந்த சூரை மீன்களை விற்பனை செய்தனர்

இந்த தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்க்க உள்ளதாக தெரிவித்த மீனவர்கள் தங்களுக்கு இந்த 60 நாட்களில் தொழில் இல்லாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே தேர்தலை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணத் தொகையை இந்த நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி