கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்

66பார்த்தது
கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
ஈரான் - இஸ்ரேல் மோதலால் பாரசீக வளைகுடா பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும் எனவும் கருதப்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆகவே உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலரை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி