மறைந்த எம்.பி. கணேச மூர்த்தி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்

60பார்த்தது
மறைந்த எம்.பி. கணேச மூர்த்தி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்
ஈரோடு பெரியார் நகர் பகுதியில் உள்ள மறைந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மனைவி ரேணுகா தேவியுடன் நேரில் சென்றார். அங்கு கணேச மூர்த்தி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தமிழகத்தில் எந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது. புதிதாக சோதனை செய்ய இந்த முறை தேர்தல் வாக்குறுதி அளித்த மோடியின் உத்தரவாதம் தேர்தல் வாக்குறுதி எடுப்படாது. தமிழகத்தினை 9 முறை பிரதமர் நரேந்திர மோடி சுற்றி வந்து விட்டார். வேறு எந்த மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றதில்லை. கொரோனா, வெள்ள பேரிடரின் போது எட்டிப்பார்க்காத மோடி தமிழகத்திற்கு இப்போது 9 முறை வந்துள்ளார் என்றார்.

தொடர்புடைய செய்தி