அசைக்க முடியாத உச்சத்தில் 'சிக்சர் மன்னன்' தோனி

71பார்த்தது
அசைக்க முடியாத உச்சத்தில் 'சிக்சர் மன்னன்' தோனி
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் தோனி கடைசி ஓவரில் 3 இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 20வது ஓவரில் அதிக சிக்சர்களை (64) விளாசிய வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து பெரும் வித்தியாசத்தில் அவர் முன்னிலை வகிக்கிறார். தோனிக்கு அடுத்த இடத்தில் பொல்லார்ட் (33) உள்ளார்.