எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி பேட்டி!

1091பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலையில் ஏற்பட்ட விபத்துகளால் 365 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து மாவட்டத்தில் ஆண்டு தோறும் சராசரியாக இதே அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்த ஆண்டு உயிரிழப்பை தடுப்பதற்காக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் நிச்சயம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் செல்போன் பேசிக்கொண்டே செல்வதை ஆங்காங்கே காணப்படுகிறது.


விலை மதிக்க முடியாத உயிரை பாதுகாக்க அவர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் அது குறித்து விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது,

விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இடங்களில் விபத்துக்கள் குறைந்து வருகிறது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர உதவி கண்காணிப்பாளர் கோல்கர் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி