மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

59பார்த்தது
மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோம் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு கொடுக்க வந்த மொத்தம் 87 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி