கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட மக்கள்

82பார்த்தது
கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட மக்கள்
கல் மற்றும் மண் கலந்து ரேஷன் கடையில் கோதுமை விநியோகம் - மக்கள் அதிர்ச்சி - கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர் யோகிஸ்வரர் திருமண மண்டபம் அருகே செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் இன்று குடும்ப அட்டை காரர்களுக்கு அரிசி, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்துள்ளனர். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் மண் மற்றும் கல் ஆகியவை அதிகமாக இருந்துள்ளது‌ இது குறித்து மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் தெரிவித்த போது, சரியான பதில் கூறவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில்பட்டி தாலூகா அலுவலகத்திற்கு வந்து தாசில்தார் சரவண பெருமாளிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையை காண்பித்து முறையிட்டனர். உடனடியாக கோதுமையை மாற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது மட்டுமின்றி, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

தொடர்புடைய செய்தி