சாலை விபத்தில் ஒருவர் பலி.

57பார்த்தது
சாலை விபத்தில் ஒருவர் பலி.
விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சாலை விபத்தில் ஒருவர் பலி.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த சுடலைமணி என்பவரின் மகன் சுடலைமுத்து (52), இவர் எட்டையபுரம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு நீராவி புதுப்பட்டி கிராமத்திலிருந்து கோட்டநத்தம் கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பிள்ளையார்நத்தம் அருகே சுடலைமுத்துவின் தோளில் அணிந்திருந்த துண்டு, ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சுடலை முத்துவின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி