தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் பகுதியில் அமைந்துள்ளது எப்போது வென்றான் நீர்த்தேக்கம் இந்த அணை பன்னிரண்டு அடி ஆழமும் 2670 மீட்டர் நீளமும் கொண்ட நீர்த்தேக்கம் ஆகும் இந்த நீர்த்தேக்கத்தில் 3. 57 மில்லியன் கன அடி நீர்த்தேக்கி வைக்கும் அளவில் கட்டப்பட்டது
இந்த அணைக்கட்டை நம்பி விவசாயிகள் சுமார் 3000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வந்தனர் மேலும் இரண்டு போகம் நெல் விவசாயம் மற்றும் தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அணைக்கட்டு தூர்வாராமல் மழைக்காலங்களில் மழைநீர் கடலுக்கு வீணாக செல்கிறது.
இந்நிலையில் இந்த எப்போது வென்றான் அணைகட்டை தூர்வார பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது நிதி ஒதுக்கப்பட்டு பல மதங்களாகியும் எப்போதும் வென்றான் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு எப்போதும் வென்றான் அணையை தூர்வாரி தண்ணீரை தேக்கி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தூர்வாரப்படாமல் மணல் மேடாக காட்சியளிப்பதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.