இளைஞர் வெட்டி கொலை!

12656பார்த்தது
இளைஞர் வெட்டி கொலை!
விளாத்திகுளத்தில் இளைஞர் வெட்டி கொலை! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ஆறுமுகம் (35), ஆறுமுகம். கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். விளாத்திகுளம் - சித்தவநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி விட்டு வரும் போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் சாலையின் அருகே இருந்த விவசாய காட்டுக்குள் ஆறுமுகத்தை இழுத்துச் சென்று, வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது, இதனைஅடுத்து தகவல் அறிந்து வந்த விளாத்திகுளம் போலீசார், ஆறுமுகத்தின் உடலை கைபற்றி விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடற்குறைவுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி