தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 45 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு வங்கியின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05. 10. 2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு https: //www. tmbnet. in/tmb_careers/doc/ADV_CFA20242501. pdf என்ற இணைய தள முகவரியை பார்வையிடலாம்.