தனிநபர் அரசின் நிலத்தை ஆக்கிரமிப்பு; ஆட்சியரிடம் புகார்

68பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ளஇரண்டு ஏக்கர் நிலத்தை கருப்பசாமி என்ற தனி நபர் அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு பட்டாவை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார்


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் குளத்துரை சேர்ந்த தொழிலதிபர் கருப்பசாமி என்பவர் அரசு அதிகாரிகள் துணையுடன் விவசாய பயன்பாட்டிற்கு என்ற பெயரில் அரசின் அனா தினம் என்ற பெயரில் உள்ள புரம்போக்கு நிலம் இரண்டு ஏக்கரை தனது பெயரில் பட்டா வாங்கியுள்ளார் ஆனால் தற்போது விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் அந்தப் பகுதியில் நவீன ரக கார் பழுது பார்க்கும் தொழிற்சாலை அமைத்துள்ளார்

தற்போது பல கோடி ரூபாய் அளவுக்கு மதிப்புள்ள நிலத்தை விவசாய பயன்பாட்டிற்கு என்று அரசு அதிகாரிகள் துணையுடன் தனது பேருக்கு பட்டா மாற்றியுள்ள தனிநபர் கருப்ப சாமியின் பட்டாவை ரத்து செய்து அந்த சொத்தை பறிமுதல் செய்து சாதாரண ஏழை விவசாயிகளுக்கு வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி